கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

X
திண்டுக்கல், கோவிந்தாபுரம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த மருதாணிகுளம் பகுதி சேர்ந்த முத்துதேவர் மகன் அன்புகடவுள்(38), R.M.காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் பாண்டியராஜன்(37) ஆகிய 2 பேரை நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் அன்புகடவுள், பாண்டியராஜன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story

