குரூப்-2 தேர்வில் 10,292 பேர் பங்கேற்பு

குரூப்-2 தேர்வில் 10,292 பேர் பங்கேற்பு
பங்கேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 46 மையங்களில் நடந்த குரூப் - 2 தேர்வில் 10,292 பேர் பங்கேற்று எழுதினர். 3,275 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 46 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 13,567 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இதில், 10,292 பேர் தேர்வு எழுதினர். 3,275 பேர் வரவில்லை. மாவட்டத்தில் குரூப்-2 தேர்வினை நியாயமாக நடத்திடும் வகையில் 2 கண்காணிப்பு அலுவலர்கள், 4 பறக்கும் படைகள், 13 சுற்றுக் குழுக்கள், 46 முதன்மை கண்காணிப்பாளர்கள், 46 ஆய்வு அலுவலர்கள், 63 காவலர்கள், 48 ஒளிப்படப் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்வுகள் முழுதும் கண்காணிக்கப்பட்டது. தேர்வு நடைமுறைகள் முழுதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி, பங்காரம் லட்சுமி கல்லுாரி, தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரி ஆகிய தேர்வு மையங்களை பார்வையிட்டு கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். ஆய்வில் தேர்வர்களின் எண்ணிக்கை, தேர்வர்களின் வருகை, தேர்வு துவங்கிய நேரம், தேர்வு விதிமுறைகள், கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
Next Story