நாமக்கல் அனுமன் ஜெயந்தி விழா முன்னேற்பாடுகள் தீவிரம் - 2 1/2 டன் வண்ண வண்ண பூக்கள் கொண்டு அலங்காரம்!

நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கோவில் வளாகப் பகுதி மற்றும் நான்கு ரத வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் கோட்டையில் புராதன சிறப்புப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி டிசம்பர் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.இதையடுத்து அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி கோவில் பிரகாரம் முழுவதும் 2 1/2 டன் எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது
. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்,குறிப்பாக பெங்களூர் மலர் சந்தையில் இருந்து பூர்ணிமா சாமந்தி, முஸ்கின் வையிட், ரோஜா, ஜிப்ஸி, கார்ணிஷன் என பல வகை மலர்களை கொண்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும், 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்துடன் காலை 10 மணி வரை ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். காலை 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு நல்லெண்ணெய், பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்று, பின்னர் மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்படும்,
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வியாழக்கிழமை நள்ளிரவு முதலே சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வார்கள்,
அனுமன் ஜெயந்தி பெருவிழாவையொட்டி நாமக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் போக்குவரத்து தடை தடை செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் வளாகப் பகுதி மற்றும் நான்கு ரத வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது, பக்தர்கள் வரிசையாக வந்து தரிசனம் செய்ய ஏதுவாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது, மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ஆஞ்சநேயரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஒரு லட்சத்து எட்டு வடை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.நாமக்கல் நகர எல்லைக்குள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது,எனவே பொதுமக்கள், வெளியூர்/ உள்ளூர் பக்தர்கள் காவல் துறையினருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Next Story