திருப்பூரில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ய முயன்ற 2 பேர் கைது. 1248 மதுபாட்டில்கள் பறிமுதல்!

திருப்பூரில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ய முயன்ற 2 பேரை கைது செய்து 1248 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு மதுவானங்களை விற்பனை செய்ய  முயன்ற இரண்டு பேர் கைது.1248 மது பாட்டில்கள் பறிமுதல்! திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை எடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவின் பேரில் திருப்பூர்  மதுவிலக்கு போலீசார் வஞ்சிபாளையம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டன அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது ஆட்டோவில் பெட்டி பெட்டியாக மதுபானங்களிலிருந்து தெரியவந்தது இதை எடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் இதுவும் பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கிக்கொண்டு வஞ்சிபாளையம் பகுதியில் வைத்து 150 ரூபாய் குவாட்டரை 250 க்கும்  அதே போல்  180  ரூபாய் பீரை 280 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது போலீசார் விசாரணை தெரிய வந்தது இதை அடுத்து மங்களம் பகுதியை சேர்ந்த பாபு   ., மற்றும் சிவகங்கையை சேர்ந்த கருப்புசாமி   ஆகிய இருவரை கைது செய்த போலீசார் 1 லட்சத்தி 83 ஆயிரத்து 960 ரூபாய் மதிப்பிலான  1,152 பீர் பாட்டில்கள்  மற்றும் 96 குவாட்டர்கள் என் மொத்தம் 1,248 மது பாட்டில்களை  பறிமுதல்செய்து விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோ ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story