கஞ்சா விற்ற 2 பேர் கைது 1.400 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற 2 பேர் கைது 1.400 கிலோ பறிமுதல்
X
திருவட்டாறு
குமரி  மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின்  கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.      அதன் தொடர்ச்சியாக  திருவட்டார்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சோதனை செய்தனர்.        அப்போது  நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரது மகன் ரூபன்(42) மற்றும் குமாரபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணி என்பவரது மகன் ஜோசப் ராஜா(42) என்பவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்யும் போது 700 கிராம் அளவுள்ள 2 பாக்கெட் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது. போலீசாா் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.
Next Story