பெண்ணிடம் நகை பறித்த 2பேர் கைது : 15 பவுன் நகை மீட்பு

X
தூத்துக்குடியில் வீடுபுகுந்து பெண்ணை தாக்கி நகை பறித்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 15 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பிரையன்ட் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். தனியார் மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 1ஆம் தேதி காலை வாக்கிங் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி முனியம்மாள் (82) மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீடுபுகுந்து முனியம்மாளை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலிச் செயின், மற்றும் கைகளில் அணிந்திருந்த 4 பவுன் வளையல் என 19 பவுன் நகைகளை பறித்துள்ளார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். ஏஎஸ்பி மதன் தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியன், அமிர்தராஜ், சரண், சரவணகுமார், பிரகாஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் காெள்ளையர்கள் தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பிரையன்ட்நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த காசி பாண்டியன் மகன் மருதுபாண்டி என்ற துரை (32), ஜெயபால் மகன் ஜெலஸ்டின் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் தாலி செயினை போலீசார் மீட்டனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story

