கொலை செய்த வழக்கில் 2 பேர் சரண்,2 பேர் கைது

X
திண்டுக்கல் மணியக்காரன்பட்டியை அடுத்த பூஞ்சோலை அருகே நேற்று இரவு பாஜக முன்னாள் மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் (எ) ரெண்டக் பாலன் என்பவரை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் JM-3 நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி அவர்கள் முன்பு சதீஷ்,கஜேந்திரன் ஆகிய 2 பேர் சரண்டைந்துள்ளனர். மேலும் SP.பிரதீப் உத்தரவின் பேரில், புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் சாணார்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ராஜக்காபட்டியை சேர்ந்த கணேஷ்குமார், ஹேமநாதன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

