பாம்பு கடித்து உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.2 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை ஆட்சித்தலைவர்

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.2 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார். அதன்படி, விருதுநகர் வட்டம், கே.உசிலம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த (லேட்) திரு.நாகராஜன் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததால், வாரிசுதாரரான அவரது மனைவி திருமதி ஜீவா என்பவருக்கு மாண்புமிகு முதலமைச்சரின்; பொது நிவாரண நிதியிலிருந்து ரூ1 இலட்சத்திற்கான காசோலையினையும், திருவில்லிபுத்தூர்; வட்டம், கூனங்குளம் புதுத்தெருவைச் சேர்ந்த (லேட்)திரு.பேச்சியப்பன் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததால், அவரது வாரிசுதாரரான மனைவி திருமதி பேச்சியம்மாள் என்பவருக்கு, மாண்புமிகு முதலமைச்சரின்; பொது நிவாரண நிதியிலிருந்து ரூ1 இலட்சத்;திற்கான காசோலையினையும், என மொத்தம் உயிரிழந்த 2 நபர்களின் வாரிதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.
Next Story

