கரூரில் லஞ்சம் பெற்ற வழக்கில் நகராட்சி துப்புரவு ஆய்வாளருக்கு 2- ஆண்டு சிறை.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

கரூரில் லஞ்சம் பெற்ற வழக்கில் நகராட்சி துப்புரவு ஆய்வாளருக்கு 2- ஆண்டு சிறை.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
கரூரில் லஞ்சம் பெற்ற வழக்கில் நகராட்சி துப்புரவு ஆய்வாளருக்கு 2- ஆண்டு சிறை.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. 2014 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம், தாந்தோணி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றியவர் செல்வராஜ் தாந்தோணி மலை பேருந்து நிலையம் அருகே ஹோட்டல் பாலாஜி என்ற உணவகத்தை நடத்தி வந்த ரமேஷ் குமாரிடம் ட்ரேடர் லைசன்ஸ் உரிமம் வழங்க 3000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ரமேஷ் குமார் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், பொறிவைத்து பிடிப்பதற்காக ரமேஷ் குமார் அளித்த பணத்தை செல்வராஜ் பெறும் போது கையும் களவும் ஆக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் தலைமை குற்றவியல் நீதி த்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, இன்று இந்த வழக்கில் செல்வராஜ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் அபராதம் ரூபாய் 20,000 விதித்து நீதிபதி ஜெயபிரகாஷ் தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் செல்வராஜை திருச்சி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
Next Story