கொலைவழக்கில் ஈடுப்பட்ட 2 பேருக்கு 26 ஆண்டு தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

கொலைவழக்கில் ஈடுப்பட்ட 2 பேருக்கு 26 ஆண்டு தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட  நீதிமன்றம் உத்தரவு
X
கொலைவழக்கில் ஈடுப்பட்ட 2 பேருக்கு 26 ஆண்டு தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கார் டிரைவரை கொலை செய்து கார் திருடிய வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி (30). இவர் தனது சொந்த காரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி வேலூர் அடுத்த கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (30) மற்றும் அவருடன் சென்ற அஸ்வாக் ஆகிய இருவரும் வேலூர் வரை செல்ல வேண்டும் என கருணாநிதியிடம் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றார். அப்போது அந்தகாரை கருணாநிதி ஓட்டிச் சென்றார்.வேலூர் அருகே வந்தபோது கார் ஓட்டுநர் கருணாநிதி பணம் வைத்திருப்பதை அறிந்த மோகன்குமார் அவரிடம் பணத்தை பறிக்க திட்டம் தீட்டியுள்ளார் . மோகன் குமாரின் பேச்சில் மாறுதல் இருப்பதை அறிந்த அஸ்வாக் காரில் இருந்து வேலூரில் இறங்கியுள்ளார் இதனை தொடர்ந்து மோகன்குமார் ஆம்பூரில் தனது மனைவியிடம் ஒருவரை பணம் வாங்கி வர சொல்லி இருப்பதாகவும் அதனால் ஆம்பூர் வரை செல்ல வேண்டும் என கூறி பின்னர் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (28) என்பவரை அழைத்துக் கொண்டு ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி மலைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.அங்கு கார் உரிமையாளர் கருணாநிதியை மோகன்குமார் மற்றும் நித்தியானந்தம் ஆகியோர் சேர்ந்து பின்பக்கமாக கழுத்தை இறுக்கி கடுமையாக தாக்கியதுடன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு கார் மற்றும் பணம் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர் மறுநாள் 22ம் தேதி நாயக்கனேரி காப்புக்காட்டில் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் கருணாநிதி என்பதும், அவரை மோகன்குமார், நித்தியானந்தம் ஆகியோர் கொலை செய்து விட்டு காரை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் காருடன் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளி வந்த 2 பேரும் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர். இந்த வழக்கு குறித்து பிடி வாரன்ட் போட்டு அவர்களை கைது செய்ய கோர்ட் உத்தர விட்டதை தொடர்ந்து போலீசார் 3 மாதங்களுக்கு முன் மோகன்குமார், நித்தியானந்தம் ஆகியோரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அதன் இறுதி விசாரணை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, நேற்று நடந்த நிலையில் வழக்கை மோகன்குமார் மற்றும் நித்தியானந்தம் ஆகியோருக்கு காரை கடத்திச் சென்ற குற்றத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் மேலும் அபராத தொகை விதித்து உத்தரவிட்டார்
Next Story