விருத்தாசலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா 3 ஆயிரம் அபராதம்
Virudhachalam King 24x7 |26 Dec 2024 4:33 PM GMT
நகராட்சியினர் அதிரடி நடவடிக்கை
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த படுதுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று நகராட்சி ஆணையர் பானுமதி உத்தரவின் பேரில் நகராட்சி பகுதிகளில் துப்புரவு அலுவலர் சக்திவேல் தலைமையிலான நகராட்சியினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முல்லா தோட்டம், ரெட்டை தெரு, கடைவீதி, பார்த்தசாரதி தெரு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேன்சி ஸ்டோர் மற்றும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் 15 மொத்த விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், கேரி பேக்குகள் விற்பனை செய்த ஒரு கடைக்கு ஆயிரம் ரூபாயும் மற்றொரு கடைக்கு 2000 ரூபாயின் என மொத்தம் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர் .தொடர்ந்து 50 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்து அறிவுறுத்தி நோட்டீஸ் விநியோகித்தனர். இந்த ஆய்வின் போது மேற்பார்வையாளர்கள் ஆறுமுகம், முத்தமிழ்செல்வன், பரப்புரையாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட நகராட்சியினர் பலர் உடன் இருந்தனர்.
Next Story