ரயில்வே ஊழியர் வீட்டில் நகை திருட்டு : 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!
Thoothukudi King 24x7 |8 Jan 2025 6:38 AM GMT
ரயில்வே ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு : 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!
கோவில்பட்டியில் ரயில்வே ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை திருடிய வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்து நகரை சேர்ந்தவர் சுந்தர். சென்னையில் ரயில்வே துறையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருள்சாந்தி. இவர் 2024, அக்டோபர் 18ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, சுமார் 16 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி மேட்டுத் தெருவை சேர்ந்த இசக்கியப்பன் மகன் வானுபாபு என்ற பாபு (34), திருநெல்வேலி மாவட்டம், களக்காடு கக்கன் நகர் மேலத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மனைவி இந்திரா (49), அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் மனைவி சகிதா (24) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
Next Story