போலியான தங்க கட்டிகளை கொடுத்து 2 சவரன் நகை மோசடி செய்த 3 பேர் கைது.

ஆரணி, ஆரணி நகரம், புதிய பஸ்நிலையம் அருகில் போலியான தங்க கட்டிகளை கொடுத்து 2 சவரன் தங்க நகையை மோசடி செய்த 3 பேரை ஆரணி நகர போலீஸார் கைது செய்தனர். மேலும் சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
ஆரணி நகரம், புதிய பஸ்நிலையம் அருகில் போலியான தங்க கட்டிகளை கொடுத்து 2 சவரன் தங்க நகையை மோசடி செய்த 3 பேரை ஆரணி நகர போலீஸார் கைது செய்தனர். மேலும் சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். ஆரணி அடுத்த சென்னாந்தல் கிராமத்தைச் சேர்ந்த நாடக ஆசிரிர் லோகநாதன்(63) என்பவர் கடந்த 7 ந் தேதி ஆரணி புதிய பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 நபர்கள் அவரிடம் சென்று உங்களை நன்றாக தெரியும் என்று பேச்சு கொடுத்து போலி தங்க பிஸ்கட்டுகளை கொடுத்து 2 சவரன் நகையை மோசடி செய்தவர்கள் மீது நாடக ஆசிரியர் லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் எஸ்.ஐ சுந்தரேசன் வழக்கு பதிவு செய்தார். மேலும் திருவண்ணாமலை எஸ்.பி. சுதாகர் உத்தரவின்பேரில் ஆரணி டிஎஸ்பி. பாண்டீஸ்வரி தலைமையில், ஆரணி நகர இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்.ஐ சுந்தரேசன் மற்றுன் போலீஸார் கொண்ட தனிப்படை அமைத்து ரோந்துப்பணியில் ஈடுபட்டு வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தபோது சொகுசு காரில் வந்த மூன்று நபர்களை போலீசார் மடக்கி விசாரிக்க முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்க சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது வேதாரண்யம் சேர்ந்த ஷெரிப் மகன் சாகுல்ஹமீது(67), வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சேர்ந்த லாபான் மகன் ஜாகிர்உசேன்(50), வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, பெரியஊனை கிராமத்தைச் சேர்ந்த ஷாபான் மகன் அயூப்கான்(48) என தெரியவந்தது. மேலும் இவர்கள்தான் போலியான தங்க பிஸ்கட்டுகளை கொடுத்து 2 சவரன் நகை மோசடி செய்த நபர்கள் என தெரியவந்தது. இதனால் தனிப்படையினர் 3 பேரையும் கைது செய்து சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
Next Story