போலி மதுபான விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வெங்காடஸ்திரி கோட்டை பகுதியில் 2014 ல் போலி மது விற்பனை செய்த வழக்கில் வத்தலகுண்டு ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த பாண்டி, இவரது மனைவி சாந்தி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சிவலிங்கம், கணேசன் ஆகிய 4 பேரை வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இதனிடையே பாண்டி, கணேசன் இறந்தனர். சாந்தி, சிவலிங்கத்துக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜ்குமார் தீர்ப்பளித்தார்.
Next Story

