வெண்ணைமலை அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்.

வெண்ணைமலை அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்.
வெண்ணைமலை அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம். கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா தளவாபாளையம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் சரவணன் வயது 43. இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9:45- மணியளவில் கரூர் - பரமத்தி வேலூர் சாலையில் வெண்ணைமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் தனது அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டு இருந்தார். அப்போது கரூர் ரத்தினம் சாலை கே எம் சி காலனி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் வயது 35 என்பவர் வேகமாக ஓட்டி வந்த தனியார் மினி பேருந்து அரசு பேருந்து பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வெண்ணைமலை பூர்ணிமா கார்டன் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மனைவி கோகிலா வயது 44, கரூர் வையாபுரி நகர் நான்காவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த வடிவேல் மனைவி கிருபா வயது 34 , தென்னிலை சின்ன வாங்கல் பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி வயது 70 ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் சரவணன் அளித்த புகாரில் சாலை விதிகளுக்கு புறம்பாக தனியார் பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஸ்ரீதர் மீது வெங்கமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story