வரவு செலவு முன்விரோதம் காரை மறித்து ரூ 2 லட்சம் கொள்ளை என 3 பேர் மீது பாதிக்கப் பட்டவர் புகார்

திருச்செங்கோடு பச்சியம்மன் கோவில் அருகில் காரில் வந்து கொண்டிருந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் முத்துசாமியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் வரவு செலவு தொடர்பாகஏற்கனவே இருந்த முன் விரோதம் காரணமாக   தாக்கி காரில் வைத்திருந்த 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் போலீசார் விசாரனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சக்தி நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரிக் வாங்கி விற்கும் மற்றும் நிதி வாங்கிக்  வட்டிக்கு கொடுக்கும் தொழில் செய்து வரும் முத்துசாமி 48 என்பவரும் அவரது நண்பர் செல்வராஜ் என்பவரும் வேகன் ஆர் கார் ஒன்றில் நாமக்கல் ரோடு பச்சியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது காரை வழிமறித்து மூன்று பேர் முன் விரோதம் மற்றும் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக தாக்கியதாகவும் காரில் வைத்திருந்த 2 லட்ச ரூபாயை பிடுங்கிக் கொண்டு சென்று விட்டதாகவும் இதில் ஏற்கனவே விபத்தில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ள தனக்கு பலத்தகாயமும் நெஞ்சு வலியும் ஏற்பட்டதாக கூறி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தார். அவரிடம் சம்பவம் குறித்து  கேட்ட போது மதுரையை சேர்ந்த மதியழகன், நாராயண பாளையம் பகுதியை சேர்ந்த காயலாங் கடை வைத்திருக்கும் கார்த்தி, கருவேப்பம் பட்டியில் லேத் பட்டறை வைத்திருக்கும் குதிரை பள்ளம் பகுதியைச் சேர்ந்த முருகன் ஆகியோரிடம் தனக்கு வரவு செலவு இருந்ததாகவும் இதில் ஏற்கனவே தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருந்ததாகவும் தன்னை கொலை செய்து விடுவதாக வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்திருந்ததாகவும் இந்த நிலையில் பட்டறை ஒன்றுக்கு தான் கொடுக்க வேண்டிய இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்க தனது நண்பர் செல்வராஜிடம் கைமாற்றாக இரண்டு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு அவருடன் காரில் வந்து கொண்டிருந்ததாகவும் அப்போது ஸ்கூட்டி போன்ற இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த மதியழகன், கார்த்தி, முருகன், ஆகிய மூன்று பேர் காரின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வழி மறித்ததாகவும் காரை நிறுத்தியதும் அருகில் வந்த கார்த்திகேயன் முருகனும் காரை விட்டு கீழே இறங்கும் படி காரை தட்டியதாகவும் அவர்களுக்கு பதில் சொல்ல இறங்கிய போது கம்பி போன்ற ஆயுதத்தால் தன்னை முதுகில் தாக்கி விட்டு காரின் முன்பக்கத்தில் டாஸ் போர்டில் வைத்திருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டதாகவும் கூறினார் மேலும் ஏற்கனவே சாலை விபத்து ஒன்றில் காலில் நடக்க முடியாத அளவுக்கு அடிபட்டு மீண்டும் ஒருமுறை சாலை விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று இரண்டு நாட்களுக்கு முன் தான் ஊர் திரும்பி இருந்ததாகவும் இந்த நிலையில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால்  தனக்கு உடல் வலி நெஞ்சு வலி ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்ததால் 100 என்ற எண்ணுக்கு போன் செய்து சொல்லிவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் விசாரணை செய்து
Next Story