பட்டணம் அருகில் கடந்த 2 மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து 30.க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்...

பட்டணம் அருகில் கடந்த 2 மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து 30.க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன்  சாலை மறியல்...
X
பட்டணம் அருகில் கடந்த 2 மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து 30.க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 8வது வார்டு பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 2 மாத காலமாக அப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் வழங்க தெரிவித்து வந்ததாகவும் ஆனால் இதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் திடீரென 30.க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ராசிபுரம்-புதுப்பட்டி சாலையில் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த ராசிபுரம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து சாலை மறியலில் கைவிட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் கேட்டபோது குடிநீர் மோட்டார் பழுதானதால் 10 நாட்கள் மட்டுமே தான் குடிநீர் வழங்கவில்லை எனவும்,வேறு மோட்டாரை வரவழைத்து தண்ணீர் வழங்குவதாக தெரிவித்தார்...
Next Story