காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 2 அன்று, 322 பஞ்சாயத்துக்களில் கிராம சபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 2 அன்று, 322 பஞ்சாயத்துக்களில் கிராம சபைக் கூட்டம்

கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில், வருகிற அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 322 கிராம பஞ்சாயத்துக்களிலும், வருகிற அக். 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று காலை காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவேண்டிய பொருட்கள் விபரம்: கிராம பஞ்சாயத்து நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம பஞ்சாயத்து தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடுகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், 2023-24ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம பஞ்சாயத்தாக அறிவிப்பு செய்தல், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் ,பெண் குழந்தைகள் பாலின பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய விஷயங்களும் விவாதிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து பஞ்சாயத்துகளிலும் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story