தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன்
X
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் பேட்டி. தெரிவித்தார்.
அரியலூர், ஜூன்.14- தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி தலைமையில் பாஜகவின் 11 ஆண்டுகள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. முன்னதாக நகரத் தலைவர் வரதராஜன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர்கள் இளையராஜா, சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர் .அதனைத் தொடர்ந்து பாஜகவின் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பாஜகவின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றி பேசினர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இதுவரை 9 ஆயிரத்து 08 கோடியே 53 லட்சம் மதிப்பிலான விவசாயிகளுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 78 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது பிரதமர் தமிழ்நாட்டிற்கு எப்போது எல்லாம் வருகிறாரோ அப்பதெல்லாம் தமிழ் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மீது உள்ள பற்றை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் தமிழ்நாடு தொழில் வளத்தில் மேம்பாடு அடையும் வகையில் சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளன ஒரு காலத்தில் இந்தியா ஏழை நாடாக பார்க்கப்பட்ட வெளிநாட்டினர் தற்போது இந்திய மக்களை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் நிலைக்கு இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு சென்றுள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகளை வாங்கும் வகையில் தமிழ்நாட்டில் 910 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன சாலையோர வியாபாரிகளுக்கு 635 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளன போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் மட்டும் 16,853 கிலோ மீட்டருக்கு தார் சாலைகள் போடப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் திட்டம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு வருகிறது இந்தியாவை மிகப்பெரிய வல்லரசு நாடாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வருகிறார் என கூறினார் பாமகவின் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்த கேள்விக்கு பாமக பிரச்சனையை தேவைப்பட்டால் பாஜக தீர்த்து வைக்கும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே திமுக அரசு வரும் சட்டமன்றத் தேர்தலில் அகற்றப்பட வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறோம். பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்று முதல்வர் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு இப்படி சொன்ன பல மாநிலங்களில் பல இடங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது காலத்தின் கட்டாயம் தேவைப்படும்போது நடந்தே தீரும் எனக் கூறினார்.முடிவில் நகர பொதுச்செயலாளர பிரவீன் நன்றி தெரிவித்தார்.
Next Story