ஜெயங்கொண்டம் அருகே நிதி சார்ந்த சமூக பாதுகாப்பு திட்ட முகாமில் 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான கடன்கள்

ஜெயங்கொண்டம் அருகே நிதி சார்ந்த சமூக பாதுகாப்பு திட்ட முகாமில் 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான கடன்கள்
X
ஜெயங்கொண்டம் அருகே நிதி சார்ந்த சமூக பாதுகாப்பு திட்ட முகாமில் 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டது.
அரியலூர், ஆக.15- ஜெயங்கொண்டம் அருகே நிதி சார்ந்த சமூக பாதுகாப்பு திட்ட முகாமில் 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நிதி சார்ந்த சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம், அடல் பென்ஷன் யோஜனா, ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளிட்ட மூத்த குடிமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவா மங்கலம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீதர் கலந்துகொண்டு சமூக பாதுகாப்பு திட்டங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளும் முறைகள் ஆகியவை குறித்து பேசினார் இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பொதுமக்களை சேர்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது முகாமில் சுய உதவி குழுக்களுக்கான கடன் மற்றும் தொழில் கடன் என இரண்டு கோடியே 40 லட்சம் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன முகாமில் அரியலூர் ஜெயங்கொண்டம் பாரத ஸ்டேட் வங்கி உயர் அதிகாரிகள் மகளிர் திட்ட அதிகாரிகள் மகளிர் சுய உதவி குழு பெண்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story