மகனின் ஆசைக்காக 2-வது முறை காதுகுத்திக்கொண்ட 45 வயது தந்தை

X
சிவகங்கை மதுரை முக்கு பகுதியை சேர்ந்தவர்கள் சேகர், செல்வராணி தம்பதியர் இவர்களது 10 வயது மகன் விஸ்வன்நாதன்ஸ் சேகர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அண்மையில், சேகர் சொந்த ஊர் திரும்பிய நிலையில் மகன் விஸ்வன்நாதன்ஸ்க்கு காதுகுத்து விழா நடத்த முடிவு செய்து பத்திரிக்கை அடித்து தாய்மாமன் உட்பட அனைவருக்கும் வழங்கி காதுகுத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக மகன் விஸ்வன்நாதன்ஸ் தந்தையான சேகருக்கும் தன்னைபோல காது குத்த வேண்டும் என அடம்பிடிக்கவே அதனை ஏற்றுக்கொண்ட தந்தை சேகர் மகனின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் அவரும் அதே மேடையில் காதுகுத்திக்கொண்டார். ஒரே மேடையில் 10 வயதான மகன் விஸ்வன்நாதன்ஸ் தனது தாய் மாமனான முனிஸ் மடியில் அமர வைத்து காது குத்தி முடித்தவுடன் அதனை தொடர்ந்து 45 வயதான சேகர் தனது தாய்மாமன் அருகே அமர்ந்து இரண்டாவது முறையாக தனது காதை குத்திக்கொண்டு தோடினை அனிந்துகொண்டார். மகனின் ஆசைக்காக தந்தையும் அதே விழா மேடையில் இரண்டாவது முறையாக காதுகுத்திக்கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

