பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம்

X
திருப்பூர் பெரியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை, தாஸ்(வயது 47) என்பவர் மானபங்கப்படுத்தியதாக கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தாஸ்-ஐ கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு சாட்சிகளும் முன்னிலைப்படுத்தி விசாரணை நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து நீதிமன்ற நீதிபதி ரஞ்சித்குமார் குற்றம் சாட்டப்பட்ட தாஸ்சுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கில் உதவி அரசு வக்கீல் பானுமதி ஆஜராகி வாதாடினார்.
Next Story

