கோவை: போக்குவரத்து விதி மீறல் – 2½ லட்சம் வழக்குகள், 6 கோடி அபராதம் வசூல்

X
கோவை மாநகரத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை போக்குவரத்து விதிகளை மீறிய 2,51,000 பேருக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.6 கோடி அபராதம் வசூலித்துள்ளனர் என போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தெரிவித்துள்ளார். விபத்துகளைத் தடுக்கும் வகையில் 24 மணி நேர ரோந்து, விபத்து பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள், ஹெல்மெட்-சீட்பெல்ட் விழிப்புணர்வு, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் கடந்த ஆண்டைவிட விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story

