மணல்மேடு- 2 கோடியே 60 லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து நாசம். வழக்கு பதிவு.

மணல்மேடு- 2 கோடியே 60 லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து நாசம். வழக்கு பதிவு.
மணல்மேடு- 2 கோடியே 60 லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து நாசம். வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா மணல்மேடு பகுதியில் டிசம்பர் 20ஆம் தேதி இரவு, கரூர், சின்னான்டாங் கோவில், சுப்பையா பிள்ளை லே-அவுட் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சிவக்குமார் வயது 48 என்பவருக்கு சொந்தமான அம்மன் ட்ரேடர்ஸ் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டனர். ஆயினும் தீ மள மளவென வேகமாக பரவியதால், தீயை கட்டுக்குள் கொண்டு வர மேலும் இரண்டு தீயணைப்பு நிலைய வாகனங்கள் கொண்டு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து பிறகு முற்றிலும் அணைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தீ விபத்தில் அந்த நிறுவனத்தில் வைத்திருந்த ஆடைகள், தளவாட சாமான்கள், ஏசி, ஃபேன், காபி போடும் மெஷின், சேர், எல் இ டி டிவி, கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் சிசிடிவி கேமராக்கள் என ரூபாய் 2 கோடியே,60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story