விவசாயியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

X

சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா இனாம்புலியூரை சேர்ந்தவர் சின்னவளியன். இவருக்கு மல்லிகா, பானுமதி என்ற இரு மனைவிகள் இருந்தனர். இதில் மல்லிகா கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மல்லிகாவுக்கு பெருமாள் என்ற மகனும், நிஷாந்தி என்ற மகளும் உள் ளனர். 2-வது மனைவி பானுமதிக்கு அர்ச்சுணன், ரெங்கசாமி என்ற 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். சின்னவளியனுக்கு இனாம்புலி யூர் மேலக்காட்டில் 3% ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தில் விவசாயியான பெருமாள் 75 சென்ட் நிலத்தை பானுமதி குடும்பத்துக்கு கொடுத்து விட்டு மற்ற நிலத்தை தான் சாகுபடி செய்து வந்துள்ளார். இதனால் அர்ச்சுணன், ரெங்கசாமி மற்றும் சின்னவளியன் ஆகியோர் பெருமாள் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். சொத்தை சரிபாதியாக பிரிக்கக்கேட்டு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி பெருமாள் வயலுக்கு சென்று விட்டு திரும்பியபோது, அர்ச்சுணன், ரெங்கசாமி, இவர்களது நண்பர்களான கதிரேசன், சந்துரு மற்றும் சின் னவளியன் ஆகியோர் பெருமாளை வழிமறித்தனர். அப்போது அர்ச்சு ணனும், ரெங்கசாமியும் அரிவாளால் பெருமாளை சரமாரியாக வெட்டி னர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டதை தொடர்ந்து, அவர் உயிர் பிழைத்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் ஹேமந்த் ஆஜரா கினார். இந்த வழக்கில் நீதிபதி மீனாசந்திரா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட அர்ச்சுணன், ரெங்கசாமி ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும், சின்ன வளியன், கதிரேசன், சந்துரு ஆகிய 3 பேருக்கு தலா ரூ.1,500 அபராத மும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Next Story