காங்கேயம் அருகே சட்டவிரோதமாக அதிக கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக தனியார் கல் குவாரிக்கு 2 கோடியே 83 லட்சம் அபராதம்.

காங்கேயம் அருகே சட்டவிரோதமாக அதிக கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக தனியார் கல் குவாரிக்கு 2 கோடியே 83 லட்சம் அபராதம்.
X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சட்டவிரோதமாக அதிக கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக தனியார் கல் குவாரிக்கு 2 கோடியே 83 லட்சம் அபராதம்.விதித்த தாராபுரம் கோட்டாட்சியர்
காங்கேயம் அடுத்த பழைய கோட்டை, குட்டபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆர்பிபி புளு மெட்டல்ஸ் என்ற தனியார் கல்குவாரியில் சட்டவிரோதமாக அதிகப்படியான கனிமவளத்தை வெட்டி எடுத்துள்ளதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தாராபுரம் கோட்டாட்சியர் தனியார் கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். அதில் 65,570 கன மீட்டர் அதிகமாக தோண்டி கனிமங்களை வெட்டி எடுத்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 கோடியே 83 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்
Next Story