கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் ரூ. 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.*

கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் ரூ. 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.*
கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் ரூ. 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.* கரூர் மாநகரின் மையப்பகுதியில் முத்துக்குமாரசுவாமி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த பேருந்து நிலையத்தில் தென்புற பகுதியில் இருந்த கட்டிடங்கள் சிதிலம் அடைந்ததால், அண்மையில் அவை இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வணிக வளாகத்துடன் கூடிய நிழற்குடைகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. அப்பகுதியில் 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு இப்பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story