+ 2 தேர்வு : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி

+ 2 தேர்வு : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி

பைல் படம் 

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட பிளஸ் டூ தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் 32வது இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டை காட்டிலும் 1.46% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவ, மாணவியர்களுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி துவங்கி 22 ஆம் தேதி வரை தமிழக முழுவதும் பல்வேறு மையங்களில் பள்ளிக் கல்வித்துறை விதித்த கட்டுப்பாட்டுகளுடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்று இன்று காலை 10 மணியளவில் இணையதளத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வில் 5750 மாணவர்களும் , 6791 மாணவிகள் என 12,541 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு வெளியிட்ட தேர்வு முடிவுகளின் படி காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் தமிழகத்தில் 32 வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 1.46 % அதிகரித்துள்ளது.

Tags

Next Story