ராசிபுரம் அடுத்த பட்டணம் ஏரிக்கரையில் 20 வயது மதிப்புத்தக்க பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..
Rasipuram King 24x7 |25 July 2024 10:54 AM ISTராசிபுரம் அடுத்த பட்டணம் ஏரிக்கரையில் 20 வயது மதிப்புத்தக்க பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 140 ஏக்கர் பரப்பளவில் ஏரியானது அமைந்துள்ளது.ஏரி கரை பகுதியில் மது பிரியர்கள் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டு வருகின்றனர். ஏரிக்கரையானது ஊரில் ஒதுக்குப்புறத்தில் உள்ளதால் அப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் வெறிச்சோடிய பகுதியாகவே காணப்படும்.இந்த நிலையில் அருகாமையை பகுதியில் வசித்து வரும் பழனிவேல் என்பவர் மாடு மேய்ப்பதற்காக மாடுகளை அழைத்து வந்துள்ளார்.அப்போது எரிக்கரையில் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.20 வயது மதிப்பு தக்க பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா?அல்லது வேறு ஏதாவது காரணங்களால எனக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எரிக்கப்பட்ட பெண், அதே பகுதியைச் சேர்ந்தவரா அல்லது வேறு பகுதியில் கொலை செய்து, பட்டணம் ஏரியில் கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டாரா என்பது குறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பெண் அணிவித்திருந்த நகைகள்,கொலுசு, மெட்டி உள்ளிட்ட நகைகள் அனைத்தும் இருந்த நிலையில் நகைக்காக கொலை செய்யப்படவில்லை என தெரிய வருகிறது..
Next Story


