போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 வருடம் சிறை தண்டனை நீதிமன்ற உத்தரவு
Perambalur King 24x7 |2 Aug 2024 4:05 AM GMT
போக்சோ வழக்கு
கடந்த 2022 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 வருடம் சிறை தண்டனை மற்றும் 1,00,000 ரூபாய் அபராதம் விதித்து தண்டனை வழங்கிய பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம். பெரம்பலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் இருந்த இவ்வழக்கில் 1.08.2024-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் குற்றவாளியான அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (43) என்பவருக்கு 20 வருடம் சிறை தண்டனையுடன் ரூபாய் 1,00,000/- அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 வருடம் சிறை என்றும் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.
Next Story