சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. 20 மது பாட்டில்கள் பறிமுதல்.

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. 20 மது பாட்டில்கள் பறிமுதல்.
சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. 20 மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் நாகராஜுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5 மணி அளவில், ஆத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆத்தூர் செல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு வயது 34 என்பவர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. காவல்துறையினர் பிரபுவை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 20 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பிரபு மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story