பள்ளபாளையத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
Karur King 24x7 |22 Aug 2024 9:46 AM GMT
பள்ளபாளையத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
பள்ளபாளையத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் தாந்தோணி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பாளையம் ஊராட்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் சுமார் 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை இன்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து சமுதாயக் கூடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சமுதாயக்கூட பணிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் போயம் பள்ளி பாஸ்கர், முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி, பள்ளபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சமுதாயக்கூடம் திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
Next Story