பெயர் பலகை மீது பேருந்து மோதி விபத்து: 20பேர் படுகாயம்!
Thoothukudi King 24x7 |25 Aug 2024 5:44 AM GMT
தூத்துக்குடியில் பெயர் பலகை மீது பேருந்து மோதியதில் பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்ப்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜோதி சீனி பாஸ் (58), தூத்துக்குடியை சேர்ந்த நடத்துனர் ஆனந்த ராஜ் (36), இயக்கி வந்துள்ளனர். அப்போது, முத்தையாபுரம், உப்பாத்து ஓடை பாலம் அருகே பேருந்து வந்து கொண்டிருக்கும் போது சாலையின் நடுவே உள்ள பெயர் பலகை மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த நடந்துனர் ஆனந்த ராஜ் மற்றும் பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அப்போது காயம் அடைந்த பயணிகள் பேருந்தை டிரைவர் வேகமாக ஓட்டி வந்ததாக திட்டியபடி பேருந்தில் இருந்து வெளியே வந்தனர். பின்னர், காயமடைந்தவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மருத்துவமனையில் பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story