இரண்டு நாய்களை தூக்கிட்டு கொலை செய்த 20 பேர் மீது வழக்கு பதிவு.

X
இரண்டு நாய்களை தூக்கிட்டு கொலை செய்த 20 பேர் மீது வழக்கு பதிவு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர், கோவில் மேட்டு புதூர், முத்துசாமி கோவில் அருகில் இரண்டு நாய்களை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு அடித்து கொலை செய்ததாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட பிராணிகள் வகை தடுப்பு சங்கத்தினர் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதில் கிட்டுசாமி என்பவரது வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய் ஒன்று என இரண்டு நாய்களை நடராஜ், பாலசுப்பிரமணி, பன்னீர், காந்திசாமி மற்றும் ஊர்மக்கள் இரண்டு நாய்களையும் அடித்து கொடுமைப்படுத்தி மரத்தில் தூக்கில் தொங்க விடுவது போல தொங்கவிட்டு அடித்துக் கொலை செய்துள்ளனர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் மூலனூர் காவல்துறையினர் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அப்பகுதி விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றதாக கூறப்படுகிறது இதன் காரணமாக ஆத்திரமடைந்த கிராம மக்கள் இணைந்து நாய்களை தூக்கிட்டு கொன்றதாக கூறப்படுகிறது. வாயில்லா ஜீவன்களை அடித்து கொடுமைப்படுத்தி தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பவம் குறித்த வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

