விராலிமலை முருகன் கோவிலில் 20க்கும் மேற்பட்ட சிலைகள் உடைப்பு!

விராலிமலை முருகன் கோவிலில் 20க்கும் மேற்பட்ட சிலைகள் உடைப்பு!
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் மிகவும் பிரத்திக்ஷ் பெற்றதாகும் அருணகிரிநாதர் ப பாடிய புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரின் பெரும் முயற்சியால் மலை அடிவாரத்தில் இருந்து சன்னதி வரை சாலைகள் அமைக்கப்பட்டன இருபுறமும் 100க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் விலங்கு சிலைகள் மயில் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை இருபதுக்கு மேற்பட்ட தெய்வத்தின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரண்டாவது முறையாக இந்த சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது இப்பகுதியில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் இரவு நேரத்தில் காவல் துறை கண்காணிப்பு ஈடுபடுத்த வேண்டும் என அப்போது மக்களும், முருக பக்தர்களும் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதை செய்யாத காரணத்தினால் மரும நபர்கள் தைரியத்துடன் இந்த சிலைகளை உடைத்து இருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Next Story