மகளிர் டி-20 கிரிக்கெட் அணியில் விளையாட நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி தேர்வு.

மகளிர் டி-20 கிரிக்கெட் அணியில் விளையாட நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி தேர்வு.
நாமக்கல் மோகனூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ட்ரினிட்டி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படிக்கும் கு. ஸ்ரீநிதி என்ற மாணவி டி20 கிரிக்கெட் அணியில் தேர்வு.
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பிகாம் பாடப்பிரிவு மாணவி கு. ஶ்ரீநிதி, 19-வயதுக்குட்பட்டோர் மகளிர் டி-20 கிரிக்கெட் அணியில் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பில் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 1 முதல் 8 வரை ஹரியானா மாநிலம் - குருகிராம் நகரில் நடைபெறும் தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்டோர் மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார். ஜனவரி 2024-ல் நாமக்கல் மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைவராகவும் இவர் இருந்துள்ளார். ஆல்ரவுண்டர் எனப்படும் மட்டையாளர் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மாநில மகளிர் கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஶ்ரீ நிதியை கல்லூரித் தலைவர் கே. நல்லுசாமி பாராட்டினார். மேலும், செயலர் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன், வணிகவியல் துறைத்தலைவர் எம். சசிகலா, உடற்கல்வி இயக்குனர் வீ. அர்ச்சனா மற்றும் பேராசிரியப் பெருமக்கள் அனைவரும் கு . ஶ்ரீ நிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story