ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர் பலி 20க்கு மேற்பட்டோர் காயம்.

குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஓட்டுனர் பலி 20க்கு மேற்பட்டோர் காயம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று இரவு சுமார் 11 மணிக்கு பழனிக்கு சுமார்30 பயணிகளுடன் ஆம்னி பேருந்து புறப்பட்டது இந்த பேருந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான தட்டாங்குட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது முன்னாள் சென்ற சரக்கு லாரியை முந்தி செல்ல முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து கவிழ்ந்தது இந்த வாகனம் சுமார் 50 அடி தூரம் இழுத்துச் சென்று கவிழ்ந்தது இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் உன்னுடைய சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதில் ஆம்னி பேருந்தின் ஓட்டுனர் பழனியைச் சேர்ந்த வீர பிரதிப் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர் இவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று ஈரோடு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story