அரியலூரில் டிச.20}இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரில் டிச.20}இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X
அரியலூரில் டிச.20}இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
அரியலூர்,டிச.17- அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை(டிச.20) நடைபெறுகிறது என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது: இம்முகாமில் முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 100}க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.  மேலும் வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம். எனவே இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ,பட்டப்படிப்பு படித்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Next Story