களியக்காவிளை : காதலன் கொலை ; தண்டனை 20-ம் தேதிக்கு மாற்றம்
Nagercoil King 24x7 |18 Jan 2025 7:18 AM GMT
குமரி
குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 2022-ம் ஆண்டு மாணவர் ஷாரோன்ராஜை, அவரது காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு நெய்யாற்றின் கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . தாய் சிந்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தாய் மாமா நிர்மலகுமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தண்டனை குறித்த தீர்ப்பு இன்று 18-ம் தேதிவழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் தீர்ப்பு தேதியை 20-ம் தேதி திங்கள் கிழமை மாற்றி கோர்ட் இன்று உத்தரவிட்டது. இதற்கிடையில் தனக்கு 24 வயது ஆனதால் மிக குறைந்த தண்டனை வழங்க கிரிஷ்மா நீதிமன்றத்தை கேட்டுள்ளார். இன்று நீதிபதி நேரடியாக கிரிஷ்மாவிடம் விசாரித்தார். அதே வேளை ஷாரோன் தரப்பினர் கிரிஷ்மாவுக்கு கடும் தண்டனை வழங்க கோரிக்கை வைத்தனர். கிரிஷ்மாவுக்கு மனித தன்மை இல்லை எனவும், அன்பை கொலை படுத்தியவர் எனவும், சாத்தானின் சுபாவம் உடையவர் எனவும் ஷாரோன் தரப்பு கோர்ட்டில் தெரிவித்தனர்.
Next Story