திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்று செல்லும் இந்து அமைப்பினரை இரவோடு இரவாக கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பாஜக வினர் 20 க்கு மேற்பட்டோர் கைது.

கைது
திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என கூறி பாஜக வினர் மற்றும் இந்து அமைப்பினர் இன்று திருப்பரங்குன்றம் மலை க்கு செல்ல உள்ளதாக அறிவித்தனர். அதன் படி தேனி மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் பாஜக முக்கிய பிரமுகர்களை காவல் துறையினர் இரவோடு இரவாக 50 க்கு மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தம் போன்ற முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கண்காணித்து கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் களை கைது செய்யப்படுவதை கண்டித்து பாஜக வினர் தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்திய 20 க்கு மேற்பட்ட பாஜக வினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
Next Story