குளித்தலையில் தனியார் மின் பணியாளர்கள் சங்கம் 20 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி
கரூர் மாவட்ட தனியார் மின் பணியாளர்கள் சங்கம் 20 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி கரூர் மாவட்டம் குளித்தலை சுப்பிரமணிய மகாலில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்தழகு தலைமை வகித்தார். செயலாளர் மாரிமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர் சுகுமார் வாழ்த்துரை வழங்கினார். செயல் தலைவர் சண்முகம் நிகழ்ச்சி தொகுப்பு வழங்கினார். துணைத் தலைவர்கள் புஷ்பநாதன், பொன்னுசாமி விழா ஒருங்கிணைப்பு செய்தனர். இந்நிகழ்வில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, மின் ஒப்பந்ததாரர்கள், மின் இணைப்பாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் தாம்பரம் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தாமோதரன், சென்னை அனைத்து தனியார் மின் பணியாளர்கள் சங்கம் சாந்தி கும்பட் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களுக்கு சங்க அடையாள அட்டை வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இதில் மாநில பொறுப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள், சங்க நிர்வாகிகள், எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர்கள், மின்சாதன உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story