பாலருவியில் தேனீக்கள் கொட்டியதில் 20 போ் காயம்

X
தமிழக எல்லையையொட்டிய ஆரியங்காவு அருகே பாலருவி பகுதியில் இருந்த தேன் கூட்டை மா்மநபா்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கூட்டிலிருந்த தேனீக்கள் சுற்றிலும் வட்டமடித்து, அப்பகுதியிலிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் வனத்துறையினரை கொட்டினவாம்.இதில், 20-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Next Story

