மேலப்பாவூரில் ரூ.20 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு

X
பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ் மேலப்பாவூரில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. கீழப்பாவூா் ஒன்றியக்குழு தலைவா் காவேரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முத்துகுமாா், ஊராட்சித் தலைவா் சொள்ளமுத்து மருதையா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாக்ரடீஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் கனகஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ.,தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தனா். தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கலைகதிரவன், கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Next Story

