மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நால்வருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

X

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நால்வருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு..*
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நால்வருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது முதியவர் உட்பட நான்கு பேர் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் முருகன், பாண்டியராஜ், ஜவகர், தேவராஜ் ஆகிய 4 பேர் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வருடம் பதிவு செய்யப்பட்ட வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேற்படி 4 பேரும் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி சுதாகர் நால்வருக்கும் 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை மற்றும் தல ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Next Story