தென்காசியில் மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 20 குழந்தைகளுக்கு காசோலைகள்

தென்காசியில் மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 20 குழந்தைகளுக்கு காசோலைகள்
X
மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 20 குழந்தைகளுக்கு காசோலைகள்
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 2ஆம் கட்டமாகத் தோ்வான 20 குழந்தைகளுக்கு கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து சனிக்கிழமை காசோலைகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் நலன்- சிறப்பு சேவைகள் துறையின்கீழ் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து காசோலைகளை வழங்கினாா். அப்போது அவா், அரசு அலுவலா்களும், தனியாா் நிறுவனங்களும் இதுபோன்று குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். நிதி ஆதரவாளா்களான ரவிச்சந்திரன், வைரவன், முரளி எண்டா்பிரைசஸ், ஹட்சன் அக்ரோ தயாரிப்பு லிமிடெட், நியூ பாய்ஸ் ஸ்போா்ட் கிளப், கடையநல்லூா் தங்கம்-வெள்ளி வியாபாரிகள் நலச் சங்கம் ஆகியோருக்கு ஆட்சியரால் நன்றிக் கடிதங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலா் ஹ. கவிதா, கலால் உதவி ஆணையா் ராமச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வனிதா (கணக்கு), தொழிலாளா் உதவி ஆணையா் திருவள்ளுவன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளா் நெல்லை மதி, புவியியல்-சுரங்கத் துறை உதவி இயக்குநா் ரமேஷ், மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளா் மாரியம்மாள், கிருபாவதி எலிசபெத், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் ராம்ஹரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Next Story