சேலத்தில் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக முன்னாள் போலீஸ் சூப்பிரண்டிடம் ரூ.20 லட்சம் மோசடி

சேலத்தில் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக முன்னாள் போலீஸ் சூப்பிரண்டிடம் ரூ.20 லட்சம் மோசடி
X
2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
சேலம் டவுன் பகுதி வித்யாலயா ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது 68). முன்னாள் போலீஸ் சூப்பிரண்டான இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி கோவையை சேர்ந்த தன்னுடைய நண்பர் ராமகிருஷ்ணன் மூலம் தொண்டாமுத்தூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது குறைந்த விலைக்கு அதாவது ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்துக்கு வாங்கி தருவதாக ராமசாமியிடம், செந்தில்குமார் கூறியுள்ளார். இதை நம்பிய ராமசாமி, செந்தில்குமாரிடம் ரூ.20 லட்சத்தை வங்கி மூலமாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் ராமசாமிக்கு தங்கம் வந்து சேரவில்லை. இதுதொடர்பாக செந்தில்குமாரிடம் பலமுறை கேட்ட பிறகு பிரகாசம் என்பவர் தங்கத்தை அனுப்பி வைத்து விட்டதாகவும், விரைவில் வந்து சேர்ந்து விடும் என்றும் செந்தில்குமார் பதில் அளித்துள்ளார். ஆனாலும் ராமசாமிக்கு தங்கம் கிடைக்கவில்லை. இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார் ராமசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி செந்தில்குமார், பிரகாசம் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story