மூதாட்டியை தாக்கி 20 பவுன் தங்க நகைகள் பறிப்பு!

X

தூத்துக்குடியில் மூதாட்டியை தாக்கி 20 பவுன் தங்க நகைகள் பறித்து சென்றுள்ளார் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் இரண்டாவது தெரு நடுப்பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் முதியவர் மற்றும் அவரது மனைவி முனியம்மாள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர் இந்நிலையில் நேற்று அதிகாலை முதியவர் தங்கராஜ் வீட்டிற்கு வெளியே கதவை அடைத்து விட்டு அந்தப் பகுதியில் வாக்கிங் சென்று கொண்டு இருந்துள்ளார் அப்போது வீட்டில் மூதாட்டி முனியம்மாள் தனியாக இருந்துள்ளார் இதை தெரிந்து கொண்ட மர்ம நபர் வீட்டின் உள்ளே புகுந்து மூதாட்டியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த 15 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார் இதைத்தொடர்ந்து கூச்சலிட்ட மூதாட்டி அவரை இழுக்க முயன்றுள்ளார் இதைத்தொடர்ந்து மர்ம நபர் மூதாட்டி கையில் இருந்த 5 பவுன் வளையலை அவரது கையை தாக்கி ரூபாய் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 பவுன் தங்க நகைகளைபறித்து கொண்டு ஓடி உள்ளார் இதைத்தொடர்ந்து தங்கராஜ் இந்த சம்பவம் தொடர்பாக தென் பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தங்க நகைகளை பரிதி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர் தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story