கிராமப்புற வேலை வாய்ப்பினை அதிகரிக்க திருவோணம் வட்டத்தில் 20 பால் கூட்டுறவு சங்கங்கள் துவக்கம் 

கிராமப்புற வேலை வாய்ப்பினை அதிகரிக்க திருவோணம் வட்டத்தில் 20 பால் கூட்டுறவு சங்கங்கள் துவக்கம் 
X
பால் கூட்டுறவு சங்கங்கள் துவக்கம் 
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில், மாநில திட்டக் குழு சார்பில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் ஏற்பாட்டின்படி, 20 கிராமங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை, மாவட்ட ஆட்சித்தலைவரும், ஆவின் செயலாட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமையன்று  திறந்து வைத்தார். இதில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைத்திட 100 விழுக்காடு திட்ட நிதியில் பால் பரிசோதனை கருவிகள், பால் கேன்கள், சங்க பதிவேடுகள் (தலா  ரூ.87ஆயிரம்/ சங்கம்) வழங்கப்பட்டு 20 கிராமங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது. திருவோணம் வட்டாரத்தில் வெட்டிக்காடு, இலுப்பைவிடுதி, புதுதெரு ஆதிதிராவிடர், தோப்பு விடுதி மகளிர், ராஜாளிவிடுதி, மணிக்கிரான் விடுதி, செவ்வாய்பட்டி, காவாளிப்பட்டி, பத்துபுளிவிடுதி, பணிக்கொண்டான்விடுதி, மேலஊரணிபுரம், உஞ்சியவிடுதி, மேலஊரணிபுரம் மகளிர், திப்பன்விடுதி, நெய்வேலி, இடையங்காடு, வண்ணாங்காடு, மேலகொள்ளுக்காடு, காட்டாத்தி உஞ்சிய விடுதி, சத்திரப்பட்டி ஆகிய 20 கிராமங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் ஏராளமான பெண் உறுப்பினர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் பால் உற்பத்தி மற்றும் ஆவின் சங்கத்திற்கு விநியோகிக்கவுள்ள பால் அளவு குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.  தொடர்ந்து, வெங்கரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பு, மருத்துவர், வருகைப் பதிவேடு, கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் குறித்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிகளில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சங்கர், ஆவின் பொது மேலாளர் சரவணகுமார், உதவி பொது மேலாளர் மரு.வடிவேலு, ஆவின் ஆய்வாளர் பிரபாகரன், மாவட்ட திட்டமிடும் அலுவலர் பாரதிதாசன், விரிவாக்க அலுவலர்கள் சிந்துஜா, யமுனா, மகேஸ்வரி, மேலாளர் (கால்நடை மருத்துவம்) மரு.தங்க மீனாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கே.குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story