திருச்செங்கோட்டில் சூதாட்டம் 20 பேர் கைது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் பணியிடமாறுதல்

X
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆர் கே மாதேஸ்வரன் 9842838116 திருச்செங்கோட்டில் மலையடிவாரம் பகுதியில் ஒரு வீட்டில் காசு வைத்து சூதாட்டம் விளையாடிய ஒரு பெண் உள்ளிட்ட 20பேரை போலீசார் கைது செய்து ரூபாய் 4லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியைசேர்ந்த ஜெயந்தி என்பவரது வீட்டில் சேலம்,ஈரோடு, நாமக்கல்,தர்மபுரி பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் காசு வைத்து சூதாட்டம் விளையாடுவதாக நாமக்கல் எஸ்பி ராஜேஸ்கண்ணாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலானபோலீஸ் படை சூதாட்டம் நடந்த வீட்டை சுற்றி வளைத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த19 பேர் மற்றும் இடம் கொடுத்த ஜெயந்தி உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். கைது நடவடிக்கையின் போது நான்கு இருசக்கர வாகனம்,இரண்டு கார் மற்றும் நான்கு லட்சம் ரொக்கபணம் ஆகியவற்றை கைப்பறினார்கள். போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையில் திருச்செங்கோட்டை சேர்ந்த தாமோதரன் 27,இவர் மீது ஒரு கொலை வழக்குநிலுவையில் உள்ளது, தீலீப் 25, பாரத் 33,இவர் மீது இரண்டு கொலை மற்றும் 6 வழக்குகள் உள்ளது, ஆனந்தவேல் 46, பாண்டிசேரி கார்த்திகேயன் 35, தலைவாசல் கிருஷ்ணமூர்த்தி 45, ஓமலூர் கிருஷ்ணன் 43, சங்ககிரி ராஜேஸ் 43, நடராஜன் 42 ஈரோடு, வீரப்பன்சத்திரம் கார்த்தி 33, ஈரோடு பெரியவலசு கெளரிசங்கர் 28,பாப்பிரெட்டி பட்டி சங்கர் 52, திருச்செங்கோடு கிருஷ்ணன் 45, ராஜா 37, ஜெயந்தி 48 வீட்டு உரிமையாளர், நல்லமூக்கான்பட்டி ரகுபதி 45, சேலம் சிவனாபுரம் ராஜா 54, சேலம் குரங்குசாவடி சூர்யா 32,சங்ககிரி பூமாலை 25,சங்ககிரி அருண் என்கிற ஜெக்ராஜ் ஆகியோரை போலீசாரிடம் சிக்கியதை அடுத்து கைது செய்தனர். மேலும் வெப்படை சக்திவேல், லோகேஸ்வரன் ஆகிய இரண்டு பேர் தலைமறை வாங்கி விட்டனர் தலைமைறைவானஇரண்டு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் திருச்செங்கோடு நகரின் மையப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மலையடிவார பகுதியில் சூதாட்டம் நடந்து வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமனைடி எஸ் பி கிருஷ்ணன் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
Next Story

