மாஜி ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை

மாஜி ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை
X
பாலியல் வழக்கு
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் (49). முன்னாள் ராணுவ வீரர். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் பக்கத்து ஊரை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இது தொடர்பாக சிறுமி தரப்பில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.      புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சுதர்சனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.       இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நடந்து வந்தது வடக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா சுதர்சனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 3000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Next Story